
பாகான் டத்தோ, பிப் 19 – கோழி, முட்டை உற்பத்தியாளர்களுக்கு தொடர்ந்து ஊக்குவிப்புத் தொகையை வழங்க வேண்டியதன் தேவை குறித்து, ஜூனில் அரசாங்கம் முடிவு செய்யும்.
இதுவரை அந்நோக்கத்துக்காக அரசாங்கம் 180 கோடி ரிங்கிட்டை செலவு செய்திருப்பதாக, விவசாயம், உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ மொஹம்மட் சாபு ( Datuk Seri Mohamad Sabu ) தெரிவித்தார்.
ஜூனில், அரசாங்கத்தின் அந்த உதவித் தொகையை தொடர்வதா இல்லையா அல்லது அந்த இரு உணவுப் பொருட்களின் விலை வழக்க நிலைக்கு திரும்புவதற்கு வேறு வழிமுறிகளை கையாள்வதா இல்லையா என்பது குறித்து முடிவு செய்யப்படுமென அமைச்சர் கூறினார்.