கோலாலம்பூர், அக்டோபர் 9 – வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு, தரம் A, B மற்றும் C கோழி முட்டைகளுக்கான மானியத்தை மதிப்பாய்வு செய்யும் என்று தெரிவித்துள்ளது.
முட்டை விற்பனை சீரானால், மானியத்தை நிறுத்தும் நடவடிக்கை குறித்து அரசு பரிசீலித்து வருவதாக, அதன் அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் சாபு கூறியுள்ளார்.
இந்த மானியத்தில் கிடைக்கும் சேமிப்பை, முக்கிய விவசாய உணவுத் துறைகளை மேம்படுத்த பயன்படுத்தலாம் என்றார், அவர்.
கடந்த ஜூன் மாதம், பிரதமர் அன்வார் இப்ராஹிம், நாடு முழுவதும் தரம் A, B மற்றும் C முட்டைகளின் சில்லறை விலையை 3 சென் குறைக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.
இந்த மானியத் திட்டத்திற்கு RM100 மில்லியன் ரிங்கிட் செலவானது குறிப்பிடத்தக்கது.