கோலாலம்பூர், பிப் 15 – இன்னும் 4 மாதத்தில் சந்தையில் கோழி இறைச்சியின் விலையும் முட்டை விநியோகமும் வழக்க நிலைக்கு திரும்பிவிடும் என விவசாய மற்றும் உணவு தொழில்துறை அமைச்சு எதிர்பார்ப்பதாக அதன் அமைச்சர் Ronald Kiandee தெரிவித்தார்.
கோழிப் பண்ணையாளர்களுக்கு அரசாங்கம் பல்வேறு உதவி தொகைகளையும் ஊக்குவிப்பு சலுகைகளையும் வழங்கியுள்ளது. இதன்வழி கோழி மற்றும் முட்டை விநியோகம் உற்பத்தியை கோழிப்பண்ணையாளர்கள் அதிகரிக்கமுடியும் என அவர் தெரிவித்தார்.
மூலப் பொருள் உட்பட உற்பத்தி செலவினால் ஏற்படும் சுமையை குறைக்கும் நோக்கத்தில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை இன்னும் நான்கு மாதத்தில் ஆக்கப்பூர்வமான விளைவை கொடுக்கும் என Ronald Kiandee விவரித்தார்.