
பெஜ்ஜிங், ஜன 4 கோவிட் பரவலை தடுப்பதற்காக தனத பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் சில நாடுகளை சீனா சாடியது. உலகின் பிரபலமான 12-க்கும் மேற்பட்ட நாடுகள் விதித்திருக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் ஏற்க முடியாத ஒன்றாக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் உட்பட பல நாடுகள் சீனாவிலிருந்து வரும் அனைத்து பயணிகளும் வருவதற்கு முன்னதாகவே கோவிட் பரிசோதனை முடிவுகளை அனுப்பி வைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. அறிவியல் அடிப்படையற்ற கட்டுப்பாடுகள் மற்றும் சில நடைமுறைகள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருப்பதாக சீனா சுட்டிக்காட்டியது.