Latestஉலகம்

கோவிட்டிற்கு எதிரான தடுப்பூசியினால் Delta வைரஸ் குறைந்தது

ஜெனிவா, நவ 25 – கோவிட்டிற்கு எதிரான தடுப்பூசியினால் கோவிட் Delta வைரஸ் பரவுவது 40 விழுக்காடு குறைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனமான WHO தெரிவித்துள்ளது. அதே வேளையில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மீண்டும் கோவிட் தொற்றுக்கு உள்ளாகாமல் இருப்பதற்கும் அந்த தொற்று மற்றவர்களுக்கு பரவிவிடாமல் இருப்பதற்கும்
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் Tedros Adhanom கேட்டுக்கொண்டார். கடந்த வாரம் ஐரோப்பாவில் 60 விழுக்காட்டிற்கும் கூடுதலாக கோவிட் தொற்று பரவியதோடு அது தொடர்பான மரண சம்பவங்களும் அதிகரித்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!