Latestஉலகம்

கோவிட்டை துடைத்தொழிக்க உதவும்படி ஜி 7 அமைப்புக்கு WHO கோரிக்கை

ஜெனிவா, மே 4 -கோவிட் தொற்று பரவலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு   G-7 எனப்படும் ஏழு தொழில்மய நாடுகளின் அமைப்பு உதவ வேண்டும் என  அனைத்துலக சுகாதார நிறுவனமான WHO கோரிக்கை விடுத்துள்ளது.

கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவுவதற்காக  உலகளாவில் நிலையில் நிதியை அமைக்கும்படி ஜி ஏழு அமைப்பை  உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர்  Tedros Adhanom கேட்டுக்கொண்டார்.

பிரிட்டிஷ் பிரதமர் Boris Johnson தலைமையி ஜூன் 11 ஆம் தேதி முதல் 13ஆம் தேதிவரை நடைபெறும் ஜி 7 உச்சநிலைக் கூட்டத்தில் கோவிட் பெருந்தொற்று தொடர்பில் ஆக்கப்பூர்மான முடிவை எடுக்க வேண்டும் என  அவர் வலியுறுத்தினார்.

ஜி 7 நாடுகள் உலக பொருளாதார மற்றும் முக்கிய அரசியல் சக்தியாகவும் விளங்கிவருகின்றன. அதோடு உலகில் பெரும்பாலான தடுப்பூசி உற்பத்தியாளர்களாகவும் அவை செயல்பட்டு வருகின்றன.

ஜி 7 தொழில்மய  நாடுகளின்  தலைமைத்துவ உதவியினால் மட்டுமே தடுப்பூசி நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என  Tedro Adhanom தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!