
கோவிட்-19 பெருந் தொற்றை, உலகளாவிய சுகாதார அவசரநிலையிலிருந்து அகற்றியது, தொற்று நோய் அபாயத்திலிருந்து முழுமையாக விடுபட்டு விட்டதாக பொருள் படாது என, WHO – உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேயஸ் (Tedros Adhanam Ghebreyesus) எச்சரித்துள்ளார்.
புதிய நோய் பரவல் மற்றும் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றொரு கொடிய தொற்றின் அச்சுறுத்தல் இன்னமும் உள்ளது என, 76-வது உலக சுகாதார மாநாட்டில் உரையாற்றிய Tedros சுட்டிக் காட்டினார்.
அந்த கொடிய தொற்றின் வீரியமும், அதனால் ஏற்படக்கூடிய தாக்கமும் இன்னும் மோசமாக இருக்குமென அவர் எச்சரித்தார்.
அதனால், அடுத்து வரவிருக்கும் தொற்றுநோயைத் தடுப்பதற்கான பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்க வேண்டிய நேரம் இது.
“அடுத்த தொற்றுநோயை எதிர்கொள்ள நேரும் போது, அது கட்டாயம் நடக்கும், நாம் ஒன்றிணைந்து அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்” என Tedros குறிப்பிட்டார்.
சுகாதாரம் தொடர்பான வளர்ச்சி திட்டங்களில் கோவிட்-19 பெருந் தொற்று, பெரும் பின்னடைவை ஏற்படுத்திச் சென்றுள்ளதையும் Tedros சுட்டிக் காட்டினார்.