Latestமலேசியா

கோவிட் சிகிச்சைக்குப் பின் ஐ.ஜே.என்னிலிருந்து டாக்டர் மகாதீர் வெளியேறினார்

கோலாலம்பூர், செப் 4 – கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த டாக்டர் மகாதீர் முகமட் நான்கு நாட்கள் சிகிக்சைக்குப் பின் இன்று காலை 9.30 மணியளவில் IJN எனப்படும் தேசிய இருதய சிகிக்சை மையத்திலிருந்து வெளியேறினார். செப்டம்பர் 6-ஆம் தேதி செவ்வாய்க்கிழமைவரை டாக்டர் மகாதீர் தமது வீட்டில் தனித்திருப்பார் என அவரது அலுவலகம் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. 97 வயதுடைய மகாதீர் கோவிட் தொற்றுக்கு உள்ளானதைத் தொடர்ந்து ஆகஸ்டு 31 ஆம் தேதியன்று ஐ.ஜே.என்னில் அனுமதிக்கப்பட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!