கோலாலம்பூர், பிப் 21 – நாட்டில் கோவிட் தடுப்பூசியும், பூஸ்டர் தடுப்பூசியும் எடுத்துக் கொண்டவர்களைக் காட்டிலும், தடுப்பூசியை எடுத்துக் கொள்ளாவதர்களை உட்படுத்திய மரண விகிதமே உயர்வாக இருப்பதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
இவ்வேளையில், நாட்டில் ஒமிக்ரோன் அலையை எதிர்கொள்ளவும், அத்தொற்றினால் ஏற்படும் இறப்பையும், கடுமையான பாதிப்புகளையும் தடுக்கும் வல்லமை பூஸ்டர் தடுப்பூசிக்கு இருப்பதாக அவர் கூறினார்.
அதையடுத்து, சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தடுப்பூசி தொடர்பான பொய்யான தகவல்களை மக்கள் நம்புவதை விடுத்து, பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டு தங்களை பாதுகாத்துக் கொள்ளும்படி கைரி கேட்டுக் கொண்டார்.