கோலாலம்பூர், பிப் 24 – மார்ச் முதலாம் தேதி தொடங்கி , தேர்ந்தெடுக்கப்பட்ட சில தடுப்பூசி மையங்களில் , பெற்றோர்கள் சிறார்களுக்கு walk in முறையில் முன் பதிவு இன்றி கோவிட் தடுப்பூசி போடத் தொடங்கலாம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த தடுப்பூசி மையங்கள் தொடர்பான விபரங்களை மாநில சுகாதார துறைகள் தத்தம் அகப்பக்கங்களில் விரைவில் வெளியிடுமென, சுகாதார துணையமைச்சர் டத்தோ நூர் அஸ்மி கசாலி தெரிவித்தார்.
இதனிடையே, இன்று தொடங்கி மைசெஜாத்ராவில், முன்பதிவுக்கான முறை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால், மார்ச் 7-ஆம் தேதிக்குப் பின்னர் பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளுக்கு தடுப்பூசிக்கான முன்பதிவைச் செய்யலாமென அவர் கூறினார்.