Latestமலேசியா

கெமமான் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல்; திரெங்கானு மந்திரிபெசார் Ahmad Samsuriயை வெட்பாளராக பாஸ் தேர்வு

கோலாலம்பூர், நவ 17 – எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கெமமான் நாடாளுமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பாளராக திரெங்கானு மந்திரிபெசாரும் , பாஸ் கட்சியின் உதவித் தலைவருமான அஹ்மாட் சம்சூரி மொக்தாரை பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி தேர்வு செய்துள்ளது. அவரது பெயரை பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் அறிவித்தார். மாநில நிலையில் மட்டுமின்றி நாடாளுமன்ற நிலையிலும் பாஸ் கட்சி மிகப் பெரிய அரசியல் ஆளுமையை தொடர்ந்து கொண்டிருக்க வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் குரலை வலுப்படுத்துவதற்கு பாஸ் கட்சியின் தலைமைத்துவம் அஹ்மாட் சம்சூரியின் பெயரை பரிந்துரைத்ததாக அவர் கூறினார்.

222 பேர் கொண்ட நாடாளுமன்றத்தில் பாஸ் கட்சி 42 இடங்களையும் பெரிக்காத்தான் நேசனலின் உறுப்புக் கட்சியான பெர்சத்து 27 தொகுதிகளையும் கொண்டுள்ளன. விண்வெளித் துறையில் பொறியியல் பட்டதாரியான 53 வயதுடைய சம்சூரி முன்னாள் விரிவுரையாளர் ஆவார். ரு ரெடாங் சட்டமன்ற உறுப்பினரான அவர் இதற்கு முன் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் உதவியாளராக இருந்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!