Latestஉலகம்

கோவிட் தடுப்பூசி ரகசியங்களை திருடியதாக ஊழியர் மீது  Pfizer நிறுவனம் வழக்கு   

சான் டியேகோ, நவ 25 – கோவிட் -19 தடுப்பு மருந்து உட்பட  தனது நிறுவனத்தின் ரகசிய தகவல்களைத்  திருடியிருப்பதாக, தனது நீண்ட கால  ஊழியர் மீது,  ஃபைசர்  ( Pfizer) நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. 15 ஆண்டுகள்  ஃபைசர் நிறுவனத்துடன் வேலை செய்து வந்த  Chun  Xiao  Li என்பவர்,  அந்நிறுவனத்துக்கு போட்டியாக விளங்கும்  மற்றொரு மருந்தகத்தில் இணைய திட்டமிட்டிருக்கிறார்.

அதையடுத்து தடயங்கள் ஏதுமின்றி, தான் வேலை செய்து நிறுவனத்தின் பல்வேறு ஆவணங்களை அவர் தனது சொந்த கருவிகளில் மாற்றியதாக,  ஃபைசர் ,  San Diego  கூட்டரசு நீதிமன்றத்தில்  வழக்கு பதிவு செய்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!