Latestஇந்தியா

கோவிட் தொற்றால் உயிரிழந்தவரின் சடலம் ஆற்றில் வீசப்பட்டது

லக்னோவ், மே 31-  கோவிட் தொற்றால் உயிரிழந்த ஆடவரின் சடலத்தை அவரின் உறவினர்கள் ஆற்றில் வீசியெறிந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இந்தியாவில் கோவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இறந்தவர்களின் சடலங்களை புதைக்கவோ தகனம் செய்யவோ வசதியில்லாததால் ஆறுகள் அல்லது நதிகளில்  உடல்களை வீசிச் செல்லும் அவலம் நீடிக்கிறது.

இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தில் பல்ராம்புர் மாவட்டத்தில் கோவிட் தொற்றால் உயிரழந்த ஆடவரின் சடலத்தை அவரின் உறவினர்கள் ஆற்றில் வீசிச் சென்றுள்ளனர்.

கடந்த மே 25ஆம் தேதியன்று பிரேம்நாத் எனும் அந்த ஆடவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காததால் மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிரிழந்தார். இறுதிச் சடங்கிற்காக பிரேம்நாத்தின் சடலம் அவரின் இரு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

எனினும், இறுதிச் சடங்கிற்கு பண வசதி இல்லாததால், உறவினர்கள்  அந்த ஆடவரின் சடலத்தை ஆற்றில் வீசிச் சென்றதாக உத்தர பிரதேச மாவட்டப் போலீஸ் அதிகாரி கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!