கோலாலம்பூர், பிப் 23- கோவிட் தொற்றினால் மருத்துவமனையில் சேர்க்கப்படும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மலேசிய தனியார் மருத்துவமனை சங்கத்தின் தலைவர் Dr Kuljit Singh தெரிவித்தார்.
தங்களது சங்கத்தின் உறுப்பினர்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இது தெரியவருவதாக அவர் கூறினார். கடந்த இரண்டு வார காமாக சிறார் வார்டுகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் Dr Kuljit Singh சுட்டிக்காட்டினார்.
இவ்வேளையில், 5 முதல் 11 வயதுடைய சிறுவர்களுக்கான தடுப்பூசி போடும் நடவடிக்கை ஒரு சில மருத்துவமனைகளில் தொடங்கப்பட்டுள்ளது. எனவே தங்களது பிள்ளைகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அவர் பெற்றோர்களை கேட்டுக்கொண்டார்.