Latestமலேசியா

கோவிட் தொற்றால் 73 பேர் மரணம்

கோலாலம்பூர், ஜூன் 10- கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் 73 பேர் மரணமடைந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,684ஆக  அதிகரித்துள்ளது.

911 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 462 பேருக்கு சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

இவ்வேளையில் நாடு முழுவதுமுள்ள மருத்துவமனைகளில் 79,848பேர் கோவிட் தொற்றுக்கான சிகிச்சையைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தொடர்ந்து இரண்டாம் நாளாக அரசாங்கம் நிர்ணயித்த இலக்கையும் தாண்டி நேற்று மட்டும் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 866 பேர் கோவிட் 19 தடுப்பூசியைப் போட்டுக் கொண்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!