கோலாலம்பூர், பிப் 24 – கோவிட் தொற்றின் பாதிப்பினால் இறந்தவர்கள் தங்களது உடல் உறுப்புக்களை தானமாக அளிக்க முடியாது.
தானமாக பெறப்படும் உடல் உறுப்புக்களில் தொற்று இருக்கும் என்தால் அந்த உடல் உறுப்புக்கள் மற்றவர்களுக்கு பொருத்தப்பட்டால் அவர்களும் கோவிட் தொற்றுக்கு உள்ளாகக்கூடும்.
எனவே கோவிட் தொற்றுக்குள்ளானவர்கள் இறந்துவிட்டால் அவர்கள் தானமாக வழங்குவதற்கு வாக்குறுதி அளித்திருந்த உடல் உறுப்புக்களை பெற்றுக்கொள்ள முடியாது என தேசிய உடல் உறுப்பு பரிமாற்ற வள மையம் தனது அதிகாரப்பூர்வ முகநூலில் தெரிவித்துள்ளது.
இது குறித்து 2020ஆம் ஆண்டு சுகாதார அமைச்சும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுவரை 493,481 பேர் தங்களது உடல் உறுப்புக்களை தானமாக வழங்குவற்கு வாக்குறுதி அளித்துள்னர்.