பெய்ஜிங், ஜன 4 – கோவிட் தொற்றின் அச்சத்தோடு குளிர் கால ஒலிம்பிக் போட்டி, பெய்ஜிங்கில் உள்ள ‘Birds Nest’ விளையாட்டரங்கில் இன்று தொடங்குகிறது. ஆகக் கடைசியாக 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்திய சீனா தற்போது குளிர் கால போட்டியை நடத்துவதன் மூலம் கோடைக்கால மற்றும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய முதல் நாடு என்ற பெருமையைப் பெறுகின்றது.
இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் இப்போட்டியை சீன அதிபர் Xi Jinping தொடக்கி வைப்பார். அதன் தொடக்க விழா நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் Vladimir Putin கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சீனாவில் மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி அமெரிக்கா, பிரிட்டன்,கனடா, ஆகியவற்றின் அரச தந்திரிகள் ஒலிம்பிக் போட்டியை புறக்கணித்திருக்கின்றனர்.