கோலாலம்பூர், பிப் 18 – கோவிட் தொற்றின் பாதிப்பினால் கடந்தாண்டு நாட்டில் 191 கர்ப்பிணி பெண்கள் இறந்துள்ளனர். அந்த எண்ணிக்கையில் 79 விழுக்காடு கர்ப்பிணிகள் கோவிட் 19 தடுப்பூசியை எடுத்துக் கொள்ளவில்லை. மேலும் 83 விழுக்காட்டினருக்கு இதர உடல் நலப் பாதிப்புகள் இருந்ததாக, சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.
அத்துடன் , கூடுதல் எடை அல்லது பருமன், கோவிட் தொற்று கண்டிருந்த கர்ப்பிணி பெண்களின் சுகாதாரத்தை பெரிதும் பாதித்ததாகவும், தரவுகள் காட்டுவதாக நோர் ஹிஷாம் குறிப்பிட்டார்.