Latestமலேசியா

செலவுகளை குறைக்க ஓய்வுபெற்றோர் ஐ,ஜே.என்னிலிருந்து வெளியேற்றமா? சுகாதா அமைச்சு விளக்கம்

கோலாலம்பூர், பிப் 27 – செலவுகளை குறைப்பதற்காக IJN எனப்படும் தேசிய இருதய சிகிச்சை நிலையத்தில் சிகிக்சை பெறும் அரசு ஊழியர்களும் ஓய்வு பெற்றோரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு அருகேயுள்ள இருதய சிகிக்சை நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவதாக வெளியான தகவலை சுகாதார அமைச்சு மறுத்துள்ளது. நோயாளிகளின் நிலைமை சீரடைந்த பின்னர், பெரியோர்களுக்கான ஆறு மாதத்திலிருந்து ஒரு ஆண்டுகள்வரை கண்காணிப்பு காலம் முடிவுற்ற பின்னர்தான் அவர்கள் IJN னிலிருந்து வெளிறுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். சிறார்களுக்கான கண்காணிப்பு காலம் ஒன்று முதல் இரண்டு ஆண்டுவரையாகவும் இருந்துவருகிறது.

சீரான நிலைமைக்கு உள்ளான நோயாளிகள் பின்னர் பொது மருத்துவமனைகளில் உள்ள இருதய சிகிச்சை பிரிவுகளில் உள்ள இருதய மருத்துவ சிகிச்சை துறைகளில் கண்காணிப்பிற்காக அனுப்பிவைக்கப்படுகின்றனர். செலவுகள் அதிகரித்தபோதிலும் ஆண்டுதோறும் சுமார் 4,000 புதிய நோயாளிகள் IJN னில் சிகிச்சை பெறும் வகையில் இந்த அணுகுமுறை அமைந்துள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 25ஆண்டு காலம் IJN னில் மேல் சிகிச்சை பெற்று வந்தபோதிலும் அங்கிருந்து தாம் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதிச்ச்சிக்குள்ளாகி இருப்பதாக ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர் Code Blue இணைய தளத்தில் எழுதிய கடித்திற்கு சுகாதார அமைச்சு பதில் அளிக்கும் வகையில் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!