நாட்டில் கோவிட் தொற்று எண்ணிக்கை அதிகரித்தாலும், பொருளாதார நடவடிக்கைகள் மூடப்படாது என பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மீண்டும் உறுதியளித்திருக்கின்றார்.
கோவிட்டிற்கு எதிரான ஈராண்டு போராட்டத்திற்குப் பின்னர், மக்கள் அத்தொற்றுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.
நாட்டில் கோவிட் தொற்றுகள் 30,000க்கும் அதிகமாக பதிவாகியிருந்தாலும் பெரும்பாலான தொற்றுகள் ஆபத்து குறைவான தொற்றுகளே என பிரதமர் குறிப்பிட்டார்.