
கோலாலம்பூர், நவ 1 – கோவிட் தொற்றுக்குள்ளான வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் பேச்சாளர் தெரிவித்தார். அவர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு வர வேண்டியதிலை. அந்த சூழ்நிலையில் வேட்பாளர்களின் சார்பில் அவர்களை முன்மொழியும் மற்றும் வழிமொழிபவர்கள் வேட்பு மனுத்தாக்கல் மையத்தில் வந்து வேட்பாளரின் சார்பில் வேட்பு மனுத்தாக்கலை சமர்ப்பிக்கலாம் என அந்த பேச்சாளர் தெரிவித்தார். வேட்பு மனுத்தாக்கல் காலை 9 மணிக்கும் 10 மணிக்குமிடையே நடைபெறும் . பக்காத்தான் ஹராப்பான் பத்து காவான் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பாளரும் பினாங்கு முதலமைச்சருமான Chow Kon Yeow இன்று கோவிட் தொற்றுக்கு உள்ளானதாக உறுதிப்படுத்தப்பட்டது.