கோலாலம்பூர், பிப் 16 – நாட்டில் முதல் முறையாக கோவிட் தொற்றுக்கு ஒரே நாளில் 27,831 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் பெரும்பாலோர் அதாவது 27,734 பேர் தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் நிலை பிரிவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முதல் பிரிவில் 7,606 பேரும் இரண்டாவது பிரிவில் 20,128 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாவது பிரிவில் 59 பேரும், நான்காவது பிரிவில் 28 பேரும், 5 ஆவது பிரிவில் 10 பேரும் இருந்து வருவதாக சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் Noor Hisham Abdullah டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கோவிட் தொற்று நாட்டில் பரவத் தொடங்கியது முதல் அந்த தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 31 லட்சத்து 11,514 ஆக உயர்ந்துள்ளது என டாக்டர் Noor Hisham Abdullah தெரிவித்தார்.