Latestமலேசியா

கோவிட் தொற்றுக்கு மேலும் 48 பேர் மரணம்

கோலாலம்பூர், நவ 26 – கோவிட் தொற்றுக்கு நேற்று மேலும் 48 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 10 பேர் மருத்துவமனைக்கு வெளியே இறந்ததாக சுகாதார அமைச்சின் அகப்பக்கம் தகவல் வெளியிட்டது. இதன்வழி கோவிட் தொற்றினால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 30,195 ஆக அதிகரித்துள்ளது. நேற்று நள்ளிரவுவரை கோவிட் தொற்றுக்குள்ள 68,755 பேர் மருத்துவமனைகளிலும் தனித்திருக்கும் மையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் 516 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு 272 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!