Latestமலேசியா

பினாங்கு பாலத்திற்கு அருகே 8 பேரை சுட்ட முன்னாள் மெய்க்காவலர் மனநோய் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்

புத்ரா ஜெயா, நவ 20 – முன்பு அஸ்மின் அலி மற்றும் நுருல் இஷா அன்வார் ஆகிய அரசியல்வாதிகளுக்கு வேலை செய்து வந்த முன்னாள் மெய்க்காப்பளர் ஒருவர் ஏழு ஆண்டுகளுக்கு முன் பினாங்கு பாலத்தில் மூன்று பேருக்கு மரணம் விளைவித்தது மற்றும் இதர ஐவரை சுட்டதற்காக மனநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்படி மேல் முறையீடு நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதி ஹடரியா சையட் இஸ்மாயில் தலைமையில் மூன்று நீதிபதிகள் அமர்வை கொண்ட மேல் முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பை தெரிவித்தது. குற்றஞ்சாட்டப்பட்ட ஜாஃபர் ஹாலிட் குற்றத்தை புரிந்துள்ளார் என்பதில் நீதிமன்றம் திருப்தி அடைந்ததாக நீதிபதி ஹடரியா தெரிவித்தார். எனினும் அவர் மீதான குற்றச்சாட்டில் முரண்பாடான அம்சங்கள் இருப்பதை எழுப்புவதில் எதிர்தரப்பு வெற்றி பெற்றது.

குற்றஞ்சாட்டப்பட்ட நபர் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததை நிருபிப்பதில் எதிர்தரப்பு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் விதித்த மரண தண்டணையை மேல் முறையீடு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குற்றம் நடந்தபோது தான் என்ன செய்கிறோம் என்று அறியக்கூடிய மனநிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் இல்லையென்பதை எதிர்தரப்பு நிருபித்துள்ளது. எனவே குற்றஞ்சாட்டப்பட்ட நபரை பேரா அல்லது ஜோகூரிலுள்ள மனநோய் மருத்துவமனைக்கு அனுப்புவதற்கு உத்தரவிடுவதாக நீதிபதிகள் அஸ்மான் அப்துல்லா மற்றும் S.M. கோமதி சுப்பையா ஆகியேருடன் விசாரணைக்கு தலைமையேற்ற நீதிபதி ஹடரியா தீர்ப்பளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!