Latestமலேசியா

கோவிட் தொற்றுக்கு 23 பேர் உயிரிழப்பு 3,120 பேர் பாதிப்பு

புத்ரா ஜெயா, மே 4 – நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றினால் 23 பேர் உயிரிழந்தனர்.

கோவிட் தொற்று பரவத் தொடங்கியது முதல் இதுவரை மாண்டவர்கள் எண்ணிக்கை 1,574ஆக உயர்ந்துள்ளது.

அதோடு தொற்றின் பாதிப்புக்கு 3,120 பேர் உள்ளாகினர்.

இதன்வழி கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 420,632ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

சிகிச்சைக்குப்பின் குணமடைந்த 2,334 பேர் மருத்துவமனையிலிருந்து வெளியேறினர். ‘

நாடு முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளில் தொற்றுக்குள்ளான 31,516 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் 338 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு 181பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிலாங்கூரில் மட்டும் இன்று 675 பேர் தொற்றுக்கு உள்ளாகினர்.

அதற்கு அடுத்த நிலையில் சரவாவில் 620 பேரும், கோலாலம்பூரில் 408 பேரும் ஜோகூரில் 336 பேரும், கிளந்தானில் 296 பேரும், பினாங்கில் 167 பேரும் தொற்றின பாதிப்புக்கு உள்ளாகினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!