கோலாலம்பூர், மார்ச் 2 – நாட்டில் நேற்று 25,854 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகினர். அவர்களில் 25,406 பேர் உள்நாட்டைச் சேர்ந்தவர்கள். தொற்றுக்கு உள்ளான இதர 448 பேர் வெளிநாட்டிலிருலுந்து வந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
தொற்றின் பாதிப்பினால் 75 பேர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சின் அகப்பக்கம் தகவல் வெளியிட்டது. மருத்துவமனைக்கு வெளியே 34 பேர் மரணம் அடைந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இதன்வழி நாட்டில் கோவிட் தொற்று பரவியது முதல் அதன் பாதிப்பினால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 32,827ஆக அதிகரித்துள்ளது. நேற்று நள்ளிரவுவரை 293,651 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகினர், அவர்களில் 374 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு 213 பேருக்கு சிகிக்சை வழங்கப்பட்டு வருகிறது.