கோலாலம்பூர், மார்ச் 8 – நாட்டில் 26, 856 பேர் நேற்று நள்ளிரவுவரை கோவிட் தொற்றுக்கு உள்ளாகினர்.
அதே வேளையில் நேற்று முன் தினம் 55 பேராக இருந்த மரண எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் நேற்று 77 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதார அமைச்சின் அகப்பக்கம் தகவல் வெளியிட்டது.
நாட்டில் கோவிட் தொற்று தொடங்கியது முதல் இதுவரை மாண்டவர்களின் எண்ணிக்கை 33,305 ஆக அதிகரித்துள்ளது.