கோலாலம்பூர், பிப் 26 – கோவிட் தொற்றுக்கு 30,644 பேர் பாதிக்கப்பட்டனர். அதே வேளையில் நேற்று 57 பேர் உயிரிழந்தனர் என சுகாதார அமைச்சின் அகப்பக்கத்தின் புள்ளி விவரங்கள் தெரிவித்தன.
நேற்று நள்ளிரவுவரை 294,430 பேர் கோவிட் தொற்றின் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மருத்துவமனையில் 7,949 பேர் அனுமதிக்கப்பட்டனர்.
332 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு 196 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் கோவிட் தொற்று பரவத் தொடங்கியது முதல் இன்றைய நாள் வரை அந்த தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 33 லட்சத்தை 67,871 ஆக அதிகரித்துள்ளது.