கோலாலம்பூர், பிப் 24 – கோவிட் தொற்றுக்கு புதிதாக நேற்று 31,199 பேர் பாதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் அகப்பக்கம் தகவல் வெளியிட்டது.
உள்நாட்டில் 31,080 பேர் தொற்றுக்கு உள்ளாகினர். இதர 119 பேர் வெளிநாட்டில் இருந்தபோது தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதுதவிர கோவிட் தொற்றின் பாதிப்புக்கு உள்ளான 55 பேர் நேற்று மரணம் அடைந்துள்ளனர்.
நாட்டில் கோவிட் தொற்று பரவியது முதல் இதுவரை மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 32,488 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிகையும் 33 லட்சத்து 5,157 ஆக உயர்ந்துள்ளது.