கோலாலம்பூர், மார்ச் 4 – நாட்டில் கோவிட் தொற்றுக்கு நேற்று 32,054 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் இத்தொற்றுக்கு உள்ளானவர்களில் 86 பேர் உயிரிழந்தனர் என சுகாதார அமைச்சின் அகப்பக்கம் தகவல் வெளியிட்டது. 28 பேர் மருத்துவமனைக்கு வெளியே மாண்டனர். இதன்வழி நாட்டில் கோவிட் தொற்று பரவத் தொடங்கியது முதல் இதுவரை மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 33,028 ஆக அதிகரித்தது. நேற்று நள்ளிரவுவரை 298,231 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். 355 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 208 பேருக்கு செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது .
Related Articles
Check Also
Close