கோலாலம்பூர், மார்ச் 5 – நாடு முழுவதிலும் நேற்று 33,209 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகினர். அதே வேளையில் 78 பேர் மரணம் அடைந்தனர். நேற்று நள்ளிரவுவரை 305,010 பேர் தொற்றின் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர். 348 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செயற்கை சுவாசக் கருவியுன் உதவியோடு 211 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் அக்கப்பக்கம் தகவல் வெளியிட்டது. கோவிட் தொற்று நாட்டில் பரவத் தொடங்கியது முதல் இதுவரை அந்த தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 35 லட்சத்து 61,766 ஆக அதிகரித்துள்ளது.