குறைந்த விலை விமானச் சேவை நிறுவனமான ஏர் ஆசியாவின் தலைமை செயல்முறை அதிகாரி ரியாத் அஸ்மத் இன்று தமது ராஜினாமாவை அறிவித்துள்ளார்.
ஏர் ஆசியாவும் அதன் குழுவினரும் நல்ல மற்றும் மோசமான எல்லா காலகட்டங்களிலும் வழங்கிய ஆதரவுக்கு தமது நன்றியை அவர் இன்ஸ்தாகிராம் பதிவில் வெளியிட்டுள்ளார்.
சிறிய இடைவேளைக்குப் பின்பு அந்நிறுவனத்தில் ஆலோசக பணியில் இணையகூடும் சாத்தியத்தையும் அவர் கூறியுள்ளார்.
அவர் 2018 ஜனவரி 10ல் ஏர் ஆசியாவின் தலைமை செயல்முறை அதிகாரி பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.