கோலாலம்பூர், பிப் 8- நாட்டில் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக தினசரி கோவிட் தொற்று எண்ணிக்கை 10,000க்கும் மேலாக பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 13,944 பேருக்குக் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் தொற்று கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 29 லட்சட்த்து 39,198ஆக உயர்ந்திருப்பதாக சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நோர் இஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
இதனிடையே, மாநில வாரியான கோவிட் தொற்று விபரங்களை மக்கள் CovidNow அகப்பக்கத்தில் பெற்றுக்கொள்ளலாம்.