கோலாலம்பூர், பிப் 11- நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றின் எண்ணிக்கை 20,000த்தைத் தாண்டியிருக்கின்றது.
கிட்டதட்ட 20,939 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், கோவிட் தொற்றின் மொத்த எண்ணிக்கை 29 லட்சத்து 96,361ஆக உயர்ந்திருப்பதாக சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நோர் இஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
அவ்வெண்ணிக்கையில், கிட்டதட்ட 20,821 தொற்றுச் சம்பவங்கள் அதாவது 99.44 விழுக்காட்டினர் முதல் மற்றும் இரண்டாம் பிரிவு கோவிட் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.