Latestஉலகம்

கோவிட் தொற்று கண்டவர்களை இரும்புப் பெட்டிக்குள் அடைக்கும் சீன அரசு

பெய்ஜீங், ஜன 14 – சீனாவில் அடுத்த மாதமன்று குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில், ‘சுழியம் கோவிட் தொற்று’ என்ற கொள்கையைப் பின்பற்றி வரும் சீன அரசு பல வகை தடை உத்தரவுகளை விதித்துவருகின்றது.

அந்த வகையில், அண்மையில், சீனா நகர்களில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் இரும்பு பெட்டிகளில் அடைத்து வைக்கப்படுகின்றனர்.

கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் உட்பட தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் ஒரு படுக்கை, கழிப்பறை மட்டுமே உள்ள அந்த இரும்பு பெட்டிகளில் 2 வாரங்களுக்கு தனித்து வைக்கப்படுகின்றனர்.

அது தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரின் கண்டனத்தைப் பெற்று வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!