ஜாசின், பிப் 15- கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்படுத்தப்பட்ட அல்லது அவர்களுடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்த ஊழியர்களை வேலைக்கு வர முதலாளிமார்கள் கட்டாயப்படுத்தக்கூடாது.
மீறினால், சம்பந்தப்பட்ட முதலாளிமார்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மலாக்கா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் Dr Muhamad Akmal Saleh எச்சரிக்கை விடுத்தார்.
மலாக்காவில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் பணியிடம் சம்பந்தப்பட்ட தொற்று மையங்கள் 4.8 விழுக்காட்டிலிருந்து 10 விழுக்காடு கூடியுள்ளது.
அதனைத் தவிர்த்து, சமீப காலங்களில் வேலைக்கு வரச் சொல்லி முதலாளிகள் கட்டாயப்படுத்துவதாக உணவுக்கடைகள், சந்தைகள், உற்பத்தித் துறையில் உள்ள ஊழியர்களிடமிருந்து தாம் புகார்களைப் பெற்றுவருவதாக Akmal Saleh சுட்டிக்காட்டினார்.