Latestமலேசியா

கோவிட் தொற்று; சிங்கப்பூரில் மேலும் 2 சந்தைகள் மூடப்பட்டன

சிங்கப்பூர், ஜூலை 22- சிங்கப்பூரில் கோவிட் தொற்றுக்கு புதிதாக 34 பேர் உள்ளாளதைத் தொடர்ந்து அந்நாட்டில் மேலும் இரண்டு சந்தைகள் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளது. கிளிமென்டி 448 சந்தை மற்றும் உணவு மையத்தில் வேலை செய்த 22 பேரும் Whoampoa Drive மார்க்கெட்டில் மேலும் 12 பேரும் கோவிட் தொற்றுக்கு உள்ளானதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

அந்த சந்தைகளில் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்வதற்காக அவை இரண்டு வாரங்களுக்கு மூடப்படுகிறது. அந்த இரண்டு சந்தைகளுக்கும் சென்றவர்களுக்கு கோவிட் பரிசோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் மேரின் பே சூதாட்ட விடுதியின் மூலம் ஒருவருக்கும் மற்றொரு இரவு விடுதி மூலமாகவும் தொற்று பரவியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. ஜூரோங் மீன்பிடித்துறைமுகம் மற்றும் கரவோக்கே விடுதிகள் போன்ற தொடர்புப்படுத்தப்பட்ட இடங்கள் வாயிலாக 130 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகினர். வெளிநாட்டிலிருந்து வந்த இருவர் உட்பட நேற்றுவரை புதிதாக 180 பேர் கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!