கோலாலம்பூர், பிப் 11 – பிரதமர் Ismil Sabri Yaakob தலைமையில் அமைக்கப்பட்ட கோவிட் தொற்று மீதான சிறப்பு பணிக்குழுவின் கூட்டம் கடந்த 3 மாதங்களாக நடைபெறாமல் இருப்பது குறித்து D.A.P பின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஏமாற்றம் தெரிவித்தார். நாளுக்கு நாள் கோவிட் தொற்று அதிகரித்து தற்போது 20,000 த்திற்கும் மேலாகியுள்ளது. ஆகக்கடைசியாக நவம்பர் 5ஆம் தேதி கோவிட் தொற்று மீதான சிறப்பு பணிக்குழு கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் சிறப்பு குழுவின் கூட்டம் கூட்டப்படவில்லை. கோவிட் தொற்றை துடைத்தொழிப்பதில் அரசாங்கம் மெத்தனமான போக்கை கொண்டிருப்பதையே இது காட்டுவதாக லிம் குவான் எங் தெரிவித்தார்.
Related Articles
Check Also
Close
-
சுங்கை பூலோ சிறையில் கைதிகள் நெரிசல்1 hour ago