கோலாலம்பூர், பிப் 24 – கோவிட் தொற்று கண்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கான புதிய SOP- யை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக் கொண்ட நிலையில், தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லையென்றால் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. அவர்கள் தங்களின் வழக்கமான நடவடிக்கைகளில் ஈடுபடலாமென சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்,
இதனிடையே, பூஸ்டர் அல்லது முழுமையாக தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள், தங்களுக்கு அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் 5 நாட்களுக்கு தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் முதலாவது 3-வது நாளில் RTK சுய கோவிட் பரிசோதனையையும் செய்ய வேண்டும்.