Latestமலேசியா

கோவிட் தொற்று பதிவான தடுப்பூசி மையம் செயல்படுகிறது; ஆனால் நாடாளுமன்றம் ?

கோலாலம்பூர், ஆகஸ்ட் 1-   ஷா ஆலாம் கோவிட் -19 தடுப்பூசி மையத்தில்,  கோவிட் தொற்று கண்டிபிடிக்கப்பட்டபோது அம்மையம் ஒரு நாளைக்கு மட்டுமே மூடப்பட்ட நிலையில், அதே காரணத்திற்காக நாடாளுமன்றம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது குறித்து, முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் அரசாங்கத்தின்  அந்த காரணத்தை யாரும் நம்பக் கூடிய  வகையிலும் இல்லையென அவர் குறிப்பிட்டார்.

பல ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் தடுப்பூசி மையத்தில்,  பணியாளர்கள் மத்தியில் 204 கோவிட் தொற்று சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, இரு தினங்களில் அம்மையம் மீண்டும் செயல்படத் தொடங்கியது.

அதை சுட்டிக் காட்டிய டத்தோ ஶ்ரீ நஜீப்,  நாள்தோறும் தடுப்பூசி மையங்களுக்கு திரளும் மக்களின் உயிரைக் காட்டிலும்,  220 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பையே மிக முக்கியமானதாக  அரசாங்கம் கருத்துவதாக  அவர் கேள்வி எழுப்பினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!