Latestமலேசியா

கோவிட் தொற்று; பொதுத் தேர்தல் 2023 ஆம் ஆண்டு நடத்தலாம் – மகாதீர் பரிந்துரை

கோலாலமபூர், மே 5- கோவிட் தொற்று பரவலை கருத்திற்கொண்டு இப்போதைய நடப்பு நாடாளுமன்றத்தின் தவணைக் காலம்  2023ஆம்  ஆண்டு  முடிந்த பின்னர் அடுத்த பொதுத் தேர்தல் நடத்தலாம் என  டாக்டர் மகாதீர் கூறியுள்ளார்.

நாட்டில் இப்போதைய கோவிட் நிலைமையை பார்த்தால்  தேர்தல் நடத்தினால் கோவிட்  தொற்றின் இன்னொரு புதிய அலை ஏற்பட்டுவிடும் சாத்தியம் இருப்பதாக  அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த செப்டம்பர் மாதம்  சபாவில் நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு கோவிட் தொற்று பெரிய அளவில் பரவியதை அனைத்து கட்சிகளும் ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டுமென   மகாதீர் நினைவுறுத்தினார்.

தேர்தலை நடத்துவதற்கு முன்  முதலில் கோவிட் தொற்றின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை  ஆராய வேண்டும்.

அவசர நிலை  மீட்டுக்கொள்ளப்பட்டாலும்  நாம் தேர்தலை நடத்த முடியாது.  2023 ஆம் ஆண்டுவரை தேர்தல் நடத்துவதற்கு நாம் காத்திருக்க வேண்டும்  என டாக்டர் மகாதீர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!