
கோலாலம்பூர், மார்ச் 19 – நீடித்த கோவிட் நெருக்கடி மற்றும் கடந்த மூன்று ஆண்டு காலமாக விலை உயர்வினால் 193,000 த்திற்கும் மேற்பட்ட தொழில் முனைவர்கள் தங்களது வர்த்தகத்தை மூடிவிட்தாக தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் Ewon Benedict தெரிவித்திருக்கிறார். கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்வரை அமைச்சு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக அவர் கூறினார். அதே வேளையில் தங்களுக்கு உதவி வழங்கப்பட்டால் வர்த்தகம் செய்வதற்கு மீண்டும் தயாராய் இருப்பதாகவும் பெரும்பலான தொழில் முனைவர்கள் கூறுகின்றனர். கடனுதவி, மற்றும் பயிற்சியும் தங்களுக்கு தேவைப்படுவதாக அவர்கள் கூறியிருப்பதாக Ewon Benedict தெரிவித்தார்.