கோலாலம்பூர், மார்ச் 6 – நாட்டில் நேற்று கோவிட் தொற்று எண்ணிக்கை மிக உயர்வாக 33, 406-ஆக பதிவாகியது. அத்துடன் அத்தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் 3 லட்சத்து 11, 207 -ஆக உயர்ந்துள்ளது.
மாநில ரீதியிலான தொற்று எண்ணிக்கையின் படி சிலாங்கூரில் 9,651 பேரும், கோலாலம்பூரில் 3,603 பேரும் அந்த உயிர்கொல்லி வைரசின் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
இதனிடையே, அந்த தொற்றால் மேலும் 67 மரணங்கள் பதிவாகின. அதில் 23 மரணங்கள் மருத்துவமனைக்கு வெளியே நிகழ்ந்தவை என சுகாதார அமைச்சு தினசரி புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது.