Latestமலேசியா

கோவிட் புதிய அலை மலேசியாவை முன்கூட்டியே தாக்கும்; கைரி எச்சரிக்கை

ரெம்பாவ், ஜூன் 23 – இதற்கு முன்பு 2 அல்லது 3 மாதங்களில் புதிய கோவிட் அலை மலேசியாவைத் தாக்குமென கணிக்கப்பட்ட நிலையில், அந்த தாக்கம் முன்கூட்டியே நிகழக் கூடுமென , சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் எச்சரித்திருக்கின்றார்.

மக்களை பயமுறுத்துவது எனது நோக்கமல்ல. மாறாக அவர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்பதற்காகவே தாம் அந்த எச்சரிக்கையை விடுத்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கு முன்பு நாட்டில் தினசரி கோவிட் தொற்று 1,000 -லிருந்து 2,000 -ஆக பதிவாகி வந்தது. ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை 2, 766 ஆக உயர்ந்திருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
எனினும் புதிய கோவிட் அலை இதற்கு முன்பு போன்று கடுமையான பாதிப்பினைக் கொண்டு வராது. அத்தொற்றினால் ஏற்படும் மரண எண்ணிக்கையும், ICU- வில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்குமென கைரி கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!