பெங்கோக், மார்ச் 8 – கோவிட் பெருந்தொற்று 3-ஆம் ஆண்டை எட்டியிருக்கும் நிலையில், அதற்கு எப்போது முடிவென்று தெரியாத நிலையில், அந்த வைரசினால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 60 லட்சத்தை தொட்டது.
உலகின் சில நாடுகளில் மக்கள் முகக் கவசத்தை அணிவதை கைவிட்டு விட்டனர். பயணங்களும், வர்த்தக நடவடிக்கைகளும் மீண்டும் வழக்கம்போல் தொடங்கிவிட்டன.
இந்நிலையில் அந்த வைரஸ் இன்னும் நம்மை விட்டு நீங்கவில்லை என்பதற்கு ஓர் எச்சரிக்கை மணியாக அந்த புதிய மரண எண்ணிக்கையை Johns Hopkins பல்கலைகழகம் வெளியிட்டுள்ளது.