ஷா அலாம், பிப் 25 – கோவிட் தொற்றினால் கடந்த ஆண்டு மரணம் அடைந்த Uddin Bashir என்ற வங்காளதேச தொழிலாளரரின் விவரங்களை மூடி மறைக்க பெண்ணிடமிருந்து 630,000 ரிங்கிட்டை லஞ்சமாக பெற்றதாக நிறுவன உரிமையாளரான சி. மகேந்திரன் மீது 16 குற்றச்சாட்டுக்கள் கொண்டுவரப்பட்டன.
630,000 ரிங்கிட் லஞ்சப் பணத்தை இணைய பண பரிமாற்றத்தின் மூலம் 51 வயதுடைய ஒரு பெண்ணிடமிருந்து பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டார். ஆம்பேங்க், மேபேங்க் யூ.ஓ.பி வங்கிக் கணக்கின் மூலம் அவர் இந்த லஞ்சப் பணத்தை பெற்றதாக 51 வயதுடைய மகேந்திரன் மீது குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.
நீதிபதி Rihaida Rafie முன்னிலையில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து மகேந்திரன் விசாரணை கோரினார். Uddin Bashir ரின் மரணத்தை போலீஸ் மற்றும் மலேசிய சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு தெரியாமல் இருப்பதற்காக அந்த பெண்ணிடமிருந்து லஞ்சம் பெற்றதாக கூறப்பட்டது. மகேந்திரனுக்கு 40,000 ரிங்கிட் ஜாமின் வழங்கப்பட்டது. இந்த வழக்கு மார்ச் 25 ஆம் தேதி மீண்டும் மறு வாசிப்புக்காக செவிமடுக்கப்படும்.