
ஜெனிவா, ஜன 5 – கோவிட் தொற்று தொடர்பாக ஏற்படும் மரண எண்ணிக்கை மற்றும் அது தொடர்பான தகவலை மூடி மறைக்கும் சீனாவின் போக்கை WHO எனப்படும் உலக சுகாதார நிறுவனம் கடுமையாக சாடியுள்ளது. தொற்றின் மோசமான பாதிப்பின் உண்மை நிலையை சீனா வெளியிடும் மரணம் தொடர்பான புள்ளி விவரங்கள் பிரதிபலிக்கவில்லையென உலக சுகாதார நிறுவனத்தின் அவசர நிலைக்கான இயக்குனர் Michael Ryan தெரிவித்தார். டிசம்பர் மாதத்திலிருந்து கோவிட் தொற்றின் பாதிப்புக்கு 22 பேர் மட்டுமே மரணம் அடைந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது. சீனா வெளியிட்டுவரும் கோவிட் தொடர்பான புள்ளி விவரங்கள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியமும் தெரிவித்துள்ளது.