Latestமலேசியா

மலேசிய இந்து அறநெறிக்கல்வி மையத்தின் தேசிய மாணவர் விழா 2024

சிரம்பான், மார்ச் 4 – மலேசிய இந்து அறநெறிக்கல்வி மையத்தில் பயிலும் 2ஆம் நிலை மற்றும் 3ஆம் நிலை மாணவர்களுக்கான தேசிய மாணவர் விழா முன்தினம் சிறப்பாக நடைபெற்றது.

42 மாணவர்களுடன் இவ்விழா அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயம், சிரம்பானில் காலை 7:30 மணியளவில் தொடங்கி மாலை 5:00 மணிக்கு நிறைவடைந்துள்ளது.

மலேசிய இந்து அறநெறிக்கல்வி மையத்தில் பயிலும் 2ஆம் மற்றும் 3ஆம் நிலை மாணவர்களை கெளரவிக்கும் விதமாக இந்நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இம்மாணவர்களின் தரம் அவர்களின் மனனம் செய்யும் திறன் அடிப்படையில் அடையாளம் காணப்படுவதாக மலேசிய இந்து அறநெறிக்கல்வி மையத்தின் நிர்வன தலைவர் இராமையா சுப்பிரமணியம் தெரிவித்தார்.

5 மணி நேரத்துக்கு 24 பிராத்தனை பாடல்கள், 109 ஒளவையின் ஆத்திசூடிகள், 32 திருக்குறள் உட்பட 91 கொன்றை வேந்தனும் இவ்விழாவில் மாணவர்களால் படைக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் மனனம் செய்யும் திறன் மேம்படுவது மட்டுமின்றி அந்த படைப்புகளின் தாக்கம் அவர்களின் வாழ்க்கையை நல்வழிப்படுத்தவும் வழிவகுக்கும் என இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நீலாய் சட்டமன்ற உறுப்பினர் YB அருள் குமார் ஜம்புநாதன் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.

இவ்விழாவினை சிறப்பு சேர்க்கும் வகையில், மாணவர்களுக்குப் போதிக்கும் ஆசிரியர்களுக்கு தேசிய நனிநல் சேவை விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் ,சான்றோர்களுக்கு சிறப்புச் செய்தல் தொடர்ந்து நன்கொடை வழங்கியவர்களுக்கும் சிறப்புச் செய்யப்பட்டுள்ளது.

விழாவின் இறுதியில், படைப்புகளை வழங்கிய மாணவர்களுக்கும் நற்சான்றிதழும் நினைவுப்பரிசுகளும் வழங்கி சிறப்பித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!