
வாஷுங்டன், மார்ச் 21 – கோவிட் -19 தொற்றுப் பரவலுக்கான மூலக் காரணத்தையும் , அந்த பரவலுக்கும் சீனா , Wuhan – னில் உள்ள ஆய்வுக் கூடத்துக்கும் உள்ள தொடர்பினையும் குறிப்பிடும் தகவல்களை வெளியிடும் சட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ படைன் ( Joe Biden ) கையெழுத்திட்டுள்ளார்.
அந்த சட்டத்தில் கையெழுத்திட்டிருப்பதின் வாயிலாக, கோவிட் தொற்றுக்கான மூலக் காரணத்தை பகிர்ந்து கொள்ள முடியுமென அவர் கூறினார்.
எனினும், உளவுத் துறையினர் திரட்டியிருக்கும் அந்த தகவல்கள், பொதுவில் வெளியிடப் படும்போது, தேசிய பாதுகாப்புக்கு மருட்டல் ஏற்படாமல் இருப்பது உறுதி செய்யப்படுமென ஜோ படைன் கூறியுள்ளார்.
இவ்வேளையில் வூஹான் ஆய்வுக்கூடத்தின் போது ஏற்பட்ட கசிவினால் கோவிட் -19 தொற்று பரவியிருக்கலாம் என்ற குற்றச்சாட்டினை, சீனா தொடக்கத்தில் இருந்தே மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.