Latestமலேசியா

கோவிட் , வெள்ளப் பாதிப்புக்கு மத்தியில் SPM தேர்வு தொடங்கியது

கோலாலம்பூர், மார்ச் 2 – கோவிட் தொற்று, வெள்ளப் பாதிப்பு ஆகியவற்றுக்கு மத்தியில் இன்று SPM மாணவர்கள் தங்களது தேர்வை எழுதியுள்ளனர்.

அதுவும், வழக்கமாக ஆண்டு இறுதியிலே SPM தேர்வு நடத்தப்படும் வேளை , கோவிட் தொற்றின் காரணமாக இவ்வாண்டு முதல் காலாண்டில் மாணவர்கள் தேர்வுக்கு அமர்ந்திருக்கின்றனர்.

இம்முறை 4 லட்சத்து 7,097 மாணவர்கள் தேர்வெழுத தகுதி பெற்றுள்ள நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாசிர் மாஸ் பகுதியில் உள்ள 7 பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த 708 மாணவர்கள் ஏப்ரலில் தங்களது SPM தேர்வை எழுதுவர்.
இரண்டாம் கட்டமாக ஏப்ரலில் நடைபெறும் அத்தேர்வில், தற்போது கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களும் தேர்வுக்கு அமர்வார்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!